கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல்

கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்துக்கு கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-08 19:30 GMT

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்துக்கு கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கணவன்- மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கே.எட்டிப்பட்டி அருகே எட்டிப்பட்டியை சேர்ந்தவர் அன்பு (வயது 30). இவருடைய சகோதரி மகாலட்சுமி. இவருக்கும் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி அருகே மேல்புதூரை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாலட்சுமி பெற்றேர் வீட்டிற்கு வந்து விட்டார். இதற்கிடையே மகாலட்சுமி தரப்பினரும், வினோத்குமார் தரப்பினரும் விசாரணைக்காக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

8 பேர் மீது வழக்கு

அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் அன்புவை, வினோத்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதுகுறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வினோத்குமார், சண்முகம் (60) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சண்முகம் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், மகாலட்சுமி, அன்பு (30) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்