தியாகதுருகத்தில்தொழிலாளி, டிரைவர் இடையே மோதல்
தியாகதுருகத்தில் தொழிலாளி, டிரைவர் இடையே மோதல் ஏற்பட்டது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). கட்டிட தொழிலாளி. தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (57). அரசு பஸ் டிரைவர்.
இவரிடம், கிருஷ்ணமூர்த்தி தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கி மோதிக்கொண்டனர்.
இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சார்லஸ் ஆகியோர் தனித்தனியாக தியாகதுருகம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி, சார்லஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.