இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு

லாலாபேட்டை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-23 18:27 GMT

லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சி புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் லாலாபேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மனோஜ் தனது நண்பர்களான மகேந்திரன் (23), அலெக்ஸ், பிரேம் ஆகியோருடன் சேர்ந்து தினேஷின் சகோதரி கவுதமி (28) வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (42), தீபன்ராஜ் (25) ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம், தீபன்ராஜ், கவுதமி ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் மனோஜ், மகேந்திரன், அலெக்ஸ், பிரேம் ஆகியோர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்குமார், தீபன்ராஜ், தினேஷ், ஆறுமுகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்