இருதரப்பினர் இடையே மோதல்; 11 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் இடையே மோதல்; 11 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-14 18:06 GMT

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் கடையக்குடி அருகே உள்ள வலையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 80). விவசாயி. இவருக்கும் இவருடைய சித்தப்பா மகன் முத்துக்குமார் (42) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கருப்பையா, முத்துக்குமார் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துக்குமார் மற்றும் 6 பேர் கருப்பையா தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதில் கருப்பையா பலத்த காயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார், முத்துவேல், மற்றொரு முத்துவேல், சரவணபிரபாகரன், ரமேஷ், நல்லகருப்பன், ராம.சுப்பையா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஆறு பேரை அரிமளம் போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு தரப்பை சேர்ந்த முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கருப்பையா தரப்பை சேர்ந்த மணி, ஆறுமுகம், பாலா, ஹரிமுத்து ஆகிய 4 பேர் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்