ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றுவதில் டிரைவர்களுக்கிடையே மோதல்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றுவதில் டிரைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-16 17:21 GMT

கடலூர், 

கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் மாயகிருஷ்ணன். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது அத்தை புஷ்பத்தை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார். இந்நிலையில் அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக மாயகிருஷ்ணன், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (வயது 52), அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் ஆம்புலன்சை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு புஷ்பத்தை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு, புறப்பட தயாரானார். அந்த சமயத்தில் அங்கு வந்த வில்வநகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களான அஜித் (26), நெல்சன் (28), முகிலன் (33) ஆகியோர் பாஸ்கர் வந்த ஆம்புலன்சை வழிமறித்தனர். பின்னர் நாங்கள் இருக்கும் போது, எதற்காக ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றினாய் என்று கூறி பாஸ்கரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கர், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அஜித், நெல்சன், முகிலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்