கோவில் திருவிழாவில் மோதல்; வாலிபர் கைது
ஆம்பூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கெங்கை அம்மன் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி சாமி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அதேப்பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த செந்தூரப்பாண்டியன் (31), தீபக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த தீபக் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தூரப்பாண்டியனை கைது செய்தனர்.