ரூ.50 ஆயிரம் கஞ்சா பறிமுதல்
வேளாங்கண்ணியில் ரூ.50 ஆயிரம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
வேளாங்கண்ணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செருதூர் பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற ஒரு வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரத் பாபு (வயது27) என்பதும், விற்பனைக்காக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்பாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.