62 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

62 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

சிவகங்கை குடிமைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 62 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் பரமக்குடி பகுதியில் இருந்து இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை மினிலாரியுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் இளவரசன் (வயது 27), கிளீனர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விக்கி குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்