வேப்பூரில்அதிக பாரம் ஏற்றிச்சென்ற 14 லாரிகள் பறிமுதல்போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
வேப்பூரில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற 14 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநத்தம்,
வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக 14 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து அதனை வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் லாரி டிரைவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம், இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார்.