வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

காவேரிப்பாக்கம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-02 17:08 GMT

காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கொண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொண்டாபுரம் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலிசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மணி (வயது 60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்