மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட, பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-27 18:44 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன்(வயது 45) என்பவர், விற்பனைக்காக சாக்கு மூட்டையில் 49 குவார்ட்டர் பாட்டில்களை கொண்டு வந்து, குண்டவெளி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி சூர்யா என்ற சிலம்பொலியிடம்(24) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை மீன்சுருட்டி போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்