ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில்வேனில் கடத்திய 45 கிலோ குட்கா பறிமுதல்
ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில் வேனில் கடத்திய 45 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம்
சேலம் மாவட்டம் ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட 45 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போதை பொருட்கள் கடத்தி வந்த தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா, ரூ.42 ஆயிரம் மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.