பெங்களூருவில் இருந்து கரூருக்குகாரில் கடத்த முயன்ற ரூ.1.86 லட்சம் குட்கா பறிமுதல்டிரைவர் கைது
ஓசூர்
பெங்களூருவில் இருந்து கரூருக்கு ஓசூர் வழியாக காரில் கடத்த முயன்ற ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான 196 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து டிரைவரிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
அவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூரை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது28) என்பதும், பெங்களூருவில் இருந்து கரூருக்கு குட்கா கடத்த முயன்றம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குட்கா, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.