சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2023-08-02 20:13 GMT

சூரமங்கலம்

ரெயில்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி நேற்று அதிகாலை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது பொம்மிடி- சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்தது. அப்போது ரெயிலின் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கைப்பை ஒன்று கிடந்தது. இதையடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகளிடம் இந்த கைப்பை யாருடையது என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கை பேக் யாருடையது என தெரியவில்லை, அதன் பிறகு அந்த பேக்கை திறந்து சோதனை செய்ததில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்