கஞ்சா பறிமுதல்

ராஜபாளையத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-20 18:43 GMT

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் புதிய பஸ் நிலையம் பகுதியில் தெற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் நரிமேடு பகுதியைச் சேர்ந்த முனியசாமி (வயது 28), இவர் வைத்திருந்த 1200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனம், ரொக்கம் ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்து முனியசாமியை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்