அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி பறிமுதல்
திருக்காட்டுப்பள்ளி போலீசார் விட்டலபுரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலபுதகிரி கொள்ளிடம் ஆற்றில் இருந்து வந்த மாட்டுவண்டியை மறிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் மாட்டுவண்டியில் வந்தவர் வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாட்டுவண்டியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப் பதிவு செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.