தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
வேளாங்கண்ணியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்படி வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யும் கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆலோசனையின்படி, பணியாளர்கள் அங்குள்ள கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.