500 கிலோ ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்
500 கிலோ ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ஆலங்குடி பொன்னன்விடுதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூக்கையா என்பவரது வீட்டில் தணிக்கை செய்த போது சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூக்கையாவை கைது செய்தனர். மேலும் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டையை பறிமுதல் செய்தனர்.