வீட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கிய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் பஜார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரை உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் பஜார் தெருவில் உள்ள அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட வீட்டை அதிரடி சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 63 பைகளில் 50 கிலோ வீதம் 3,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது திருமங்கலம் பஜார் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ரேஷன் அரிசியை வாங்கி விற்பதாக தகவல் தெரியவந்தது. உணவு தடுப்பு பிரிவின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.