135 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கலவை அருகே 135 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, அரிசி ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். திமிரி- காவனூர் சாலையில் சென்றபோது சண்முகம் என்பவர் ரேஷன் அரிசியை வாங்கி அதை தனது அரிசி ஆலையில் உடைத்து கோழி தீவனத்திற்கு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சோதனை செய்ததில் 70 கிலோ கொண்ட 135 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அரிசி ஆலை உரிமையாளர் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். மேலும் சண்முகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.