முட்டத்தில்1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
முட்டத்தில்1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை:
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் முட்டம் கடற்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சொகுசு காரை தடுத்த போது, அதை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். அந்த காரில் அதிகாரி சோதனை போட்ட போது அதில் சிறு, சிறு மூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அரிசி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உடையார் விளை குடோனில் ஒப்படைத்தனர். கார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.