1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை,
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலையில் போலீசார் மடிச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு காரை மடக்கி நிறுத்தினர். உடனே டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், அரிசியை காப்புகாடு அரசு குடோனிலும் ஒப்படைத்தனர்.