1¼ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது

புதுக்கோட்டையில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 19:34 GMT

புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையம் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த திருக்கோகர்ணத்தை சேர்ந்த வினோத் (வயது 28), புதுக்கோட்டையை சேர்ந்த சிவா (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு சம்பவத்தில் புதுக்கோட்டை டவுன் போலீசார் சந்தைபேட்டை அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுதாகர் (21) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்