ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே புக்கசாகரத்தில் இருந்து ஓசூர் நோக்கி 3 லாரிகளில் கற்கள் கடத்தி வருவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புக்கசாகரம்-ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் 69 டன் எடை கொண்ட கற்களுடன் 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 3 லாரிகளிலும் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக தப்பியோடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.