மணல் அள்ளிய லாரி பறிமுதல்

மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-05 18:43 GMT

திருச்சுழி, 

திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் கானல் ஓடை பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் பால்பாண்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கானல் ஓடையில் அனுமதியின்றி சிலர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இவர்கள் போலீசாரை பார்த்தும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்ததில் அரை யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. பின்னர் மணல் அள்ள பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்