ஆத்தூர்:
ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ரகுபதி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை மீறி வானங்களை இயக்கிய பயணிகள் ஆட்டோ, பள்ளி வாகனம் உ ள்பட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.