திமுக எம்.பி., கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு
திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.