ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு

ஓசூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு, ஓசூரில் நடைபெற்றது. முன்னதாக, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே, சங்க மாநில தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி. 2-வது மாவட்ட மாநாட்டுக்கு, மாவட்ட துணைத்தலைவர் சங்கரய்யா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சுப்பராயன் எம்.பி., மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியார் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

மாநாட்டில் "ஓசூர் சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைககளில் தொடர்ந்து 480 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்ளுக்கு பணி நிரந்தரம் செய்வேண்டும். கெலமங்கலம் பகுதியில் இயங்கி வரும் டாட்டா நிறுவனத்தின் முதல் அலகில், மாவட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும்போது, தமிழக இளைஞர்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். ஓசூரில் தொழிலாளர் துறையின் துணை ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் பூதட்டியப்பா, மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின்போது, புதிதாக 25 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்