மணிப்பூர் கலவரத்தை கண்டித்துமக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-31 18:45 GMT

தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அலெக்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர் (மத்தி), விக்ரம் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை மண்டல கட்டமைப்பு செயலாளர் பிரேம்நாத், ஊடக பிரிவு மண்டல செயலாளர் யோகேஷ், தொழிலாளர் அணி மண்டல செயலாளர் ராஜன், வக்கீல் அணி துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சண்முகராஜா, நற்பணி இயக்க முன்னாள் அமைப்பாளர் பிராங்கிளின், நகர செயலாளர்கள் ராஜா, சேர்மதுரை, முருகன், சிசில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்