மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-26 18:45 GMT

கோவில்பட்டி:

மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கண்டித்தும், தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோவில்பட்டி இ. எஸ். ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் மகாராஜன், துணைத்தலைவர் நவநீத கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட இணை செயலாளர் உமாதேவி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க வட்டார செயலாளர் பிரான்சிஸ், மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி, வேளாண்மை அலுவலர் சங்கம் பாண்டீஸ்வரி, ஊராட்சி அலுவலர் சங்க வட்டச்செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல கோவில்பட்டி வணிகவரித் துறை அலுவலகம், கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலகம், நகரசபை அலுவலகம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம் முன்பும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்