மத்திய அரசை கண்டித்துவருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி கட்சியினர் தேனியில் பெரியகுளம் சாலையில் இருந்து என்.ஆர்.டி. சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் ேமாடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.