மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

அருமனையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

Update: 2023-07-02 18:45 GMT

அருமனை, 

மத்திய பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் ஆகியவற்றை கண்டித்து அருமனை குஞ்சாலுவிளையில் ராஜீவ்காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மாலைநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட் தலைமை தாங்கினார். மேல்புறம் கிழக்கு வட்டார இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் சுதாகர், காங்கிரஸ் வட்டார தலைவர் கிங்சிலி சாலமன், ஜாண்ரோஸ் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். இதில் விஜயதரணி எம்.எல்.ஏ., அருமனை கவுன்சிலர் ஜிமினா, மாவட்ட சேவாதளப்பிரிவு தலைவர் ஜோசப் தயார் சிங், மாவட்ட விவசாய அணி தலைவர் எபனேசர், பிராங்கிளின், ஜோய் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்