பட்டதரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பட்டதரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2023-09-13 12:33 GMT

தாராபுரம்

தாராபுரம் அருகே  பட்டதரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

பட்டதரசி அம்மன் கோவில்

தாராபுரம் அருகே பட்டதரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிேஷக விழா திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தாராபுரம் அருகே உள்ளது குப்பிச்சிபாளையம். மஹா கணபதி, அருள்மிகு  பட்டதரசி அம்மன்.  கருப்பண்ணசுவாமி, கன்னியாத்தாள் திருக்கோவில்கள்100 ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற திருக்கோயிலாக விளங்கி வருகிறது.இக் கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்று சுவர்கள் புணரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி தரும் கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவினையொட்டி நேற்றைய முன்தினம் இரவு கணபதி ஹோமம்,  லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்குகால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து யாகம் சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வந்தனர். முதலில்  பட்டத்தரசிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அருள்மிகு  பட்டத்தரசி விமானம் உள்ளிட்ட மற்றும் அனைத்து தெய்வங்களில் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை காண தாராபுரம் ஆத்துக்கால்புதூர், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.




----

Reporter : K. Palanivel Location : Tirupur - Dharapuram - Dharapuram

Tags:    

மேலும் செய்திகள்