அப்பா பைத்தியசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

சூரமங்கலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்- அமைச்சர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-10-25 20:15 GMT

சூரமங்கலம்:-

சேலம் சூரமங்கலத்தில் பிரசி்த்தி பெற்ற அப்பா பைத்தியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இங்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அப்பா பைத்தியசாமி கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதைத்தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில் அப்பா பைத்தியசாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு வழிபாடு நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்