ஆற்றங்கரை கடற்கரையில் குவிந்து கிடக்கும் சங்கு, சிப்பிகள்

கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக ஆற்றங்கரை கடற்கரையில் சங்கு, சிப்பிகள் குவிந்து கிடக்கின்றன.

Update: 2023-09-12 18:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே அமைந்துள்ளது ஆற்றங்கரை கடல் பகுதி. இது வைகை ஆற்றுநீர் சேரும் ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியாகும்.

இந்த நிலையில் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றங்கரை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கடல் நீரோட்டம் வேகமாக காணப்பட்டது.இதனிடையே கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக கடலில் உள்ள பல வகையான சங்கு, சிப்பிகளும் ஆற்றங்கரை முகத்துவார கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. தட்டு சிப்பி, கோபுர சிப்பி மற்றும் சிறிய வகை சங்குகளும் ஏராளமானவை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.ஆற்றங்கரை முகத்துவார கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வருவது கிடையாது என்பதால் கடற்கரையோரங்களில் சங்கு சிப்பிகளும் அப்படியே கரை ஒதுங்கிய நிலையில் குவிந்து கிடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்