பள்ளிக்கூடத்துக்கு கணினி உபகரணங்கள்
பள்ளிக்கூடத்துக்கு கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கணினி மூலமாக கற்றல் வலுப்பெறவும், ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்தவும் கணினி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராம்குமார் ரகுபதி சார்பில் கலா கலந்து கொண்டு கணினி கலர் பிரிண்டர் உபகரணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் வழங்கினார். பள்ளியின் புரவலர்கள் விநாயகம் சிவன்பாண்டியன், விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.