30 வழக்குகளுக்கு தீர்வு.

30 வழக்குகளுக்கு தீர்வு.

Update: 2023-03-11 12:48 GMT

தாராபுரம்

மோட்டார் வாகன விபத்து வழக்கு குறித்த சிறப்பு மக்கள் தேசிய நீதி மன்றத்தின் மூலம் விபத்தில் காயம் அடைந்து இறந்து போன பயனாளிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதத்தரவின்படிதாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் 30 வழக்குகளுக்கு ரூ.56 லட்சத்து88ஆயிரத்திற்கான வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைத்தார்.தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு குறித்த சிறப்பு நீதிமன்ற முகாம் நேற்று நடைபெற்றது.

வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார்.அப்போது மக்கள் நீதி மன்றத்தில் 30மோட்டார் வாகன விபத்து வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ 56.88 லட்சத்துக்கான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குக்காக சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார்.அப்போது வக்கீல்கள் சங்க தலைவர் கலைச் செழியன் மற்றும் செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன், வழக்கறிஞர் எஸ்.டி சேகர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்