தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-20 20:28 GMT

தெருநாய்கள் தொல்லை

கிருஷ்ணகிரி நகராட்சி, தேவசமுத்திரம், கிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், கிருஷ்ணகிரி.

நாமக்கல்-மோகனூர் சாலையில் ெதருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அந்த பகுதியில் உதவி கலெக்டர் அலுவலகம், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், பி.எஸ்.என்.எல்.‌ அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் அந்த அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் தெருநாய்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வருமா?

கோவில் குளம் பராமரிக்கப்படுமா? 

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நத்தஅள்ளி கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் குளத்தை பராமரிக்கவேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

ராஜா, இண்டூர், தர்மபுரி.

எட்டாத உயரத்தில் புகார் பெட்டி

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. மேலும் பள்ளியை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பாலியல் தொடர்பான புகார் அளிக்க வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி சுமார் 8 அடி உயரத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் புகார்களை அதில் போடுவதற்கு வாய்ப்பு இல்லை நிலை உள்ளது. எனவே இந்த குறைகள் களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், கருங்கல்லூர்.

Tags:    

மேலும் செய்திகள்