ரூ.11½ லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவு

ரூ.11½ லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவு பெற்றது.

Update: 2023-05-31 18:46 GMT

திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைக்குடிபட்டி, செங்காவிடுதி கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் திருமயம் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ஓலைக்குடிபட்டி கிராமத்தில் ரூ.4.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறுடன் புதிய பைப்லைன் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதேபோல் செங்காவிடுதி கிராமத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து திருமயம் கடைவீதி பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளத்திற்கு ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்தையும் திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர் சரண்யா சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்