நெய்வேலியில் மண் வளம் பாதிக்கப்படுவதாக புகார்: 33 கிராமங்களில் ஆய்வுக்காக தண்ணீரை சேகரித்த அதிகாரிகள்

நெய்வேலியில் மண் வளம் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 33 கிராமங்களில் ஆய்வுக்காக அதிகாரிகள் தண்ணீரை சேகரித்தனா்.

Update: 2023-08-30 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் பாதரசம் கலந்திருப்பதாகவும், மண்வளம் மற்றும் காற்று மாசடைந்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 10-ந்தேதி சென்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அதில் , வல்லனர் குழுவை அமைக்க உத்தரவிட்து. அதன்படி, மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அய்வு செய்ய 5 பேர் கெர்ணட குழுவை நியமித்து மாசுகட்டுப்பாட்டு வரியம் அமைத்தது. தமிழ்நாடு நீர்பகுப்பாயம் துறையின் தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் சுஜாதா உத்தரவின்பேரில் துணை தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் கேசவன், கிண்டி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பூபதி, ஷேக்தாவுத் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் காலை நெய்வேலி வந்தனர். தொடர்ந்து அவர்கள் பழையநெய்வேலி, மேல்பாப்பன்பட்டு, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், கீழ்பாதி, வடக்குசேப்ளாநத்தம். உய்யகொண்டராவி, வடக்குவெள்ளூர், தெற்குவெள்ளூர் வெளிக்கூனங்குறிச்சி, காட்டு குறிச்சி, தொப்புளிக்குப்பம், அம்மேரி, ஆதண்டார்கொல்லை உள்ளிட்ட 33 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் குழாய், ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் மாதிாிகளை சேகரித்தனர். இந்த மாதிரி தண்ணீரை சென்னைக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து தலைமை நீர் பகுப்பாயம் இயக்குனரிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் வருகிற 10-ந்தேதி சமர்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கம்மாபுரம் வட்டார மருத்துவர் அருண்ராஜ், கம்மாபுரம் சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஜான்சன், கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்