வேலியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

வேலியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-22 19:00 GMT

மணப்பாறை:

மணப்பாறை பாத்திமாமலை அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. சுமார் ரூ.10 கோடி மதிப்புடைய இந்த நிலத்தை பாதுகாக்கும் வகையில், இந்த நிலத்தை சுற்றி ரூ.11 லட்சம் மதிப்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு வேலியை சமூக விரோதிகள் சிலர் தொடர்ந்து சேதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து வேலியை சேதப்படுத்தி வருவதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மணப்பாறை போலீசில் செவலூர் கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்