தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-11 18:45 GMT

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற மர்ம காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளது. மக்களின் நலன்கருதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேகநாதன், தேவகோட்டை.

குப்பைகள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய் தொற்று அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன், கல்லல்.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகுமார், எஸ்.புதூர்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிர்வேல், காரைக்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆகாஷ், காளையார்கோவில்.

Tags:    

மேலும் செய்திகள்