தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-08 18:45 GMT

இடையூறு

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதி சாலையோரங்களில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கும் குப்பைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞானசேகர், கல்லல்.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிகுமார், தேவகோட்டை.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தூக்கமின்றி அவதியடைவதுடன் உடல்நலன் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கம், எஸ்.புதூர்.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் மெயின் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன், காரைக்குடி.

உடற்பயிற்சி கூடம் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் உடல் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கானாடுகாத்தான்.

Tags:    

மேலும் செய்திகள்