புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-25 18:45 GMT

குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் முப்புடாதி அம்மன் கோவில் எதிர்புறம் ரோட்டின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

காட்சி பொருளான புதிய டிரான்ஸ்பார்மர் 

சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோதைநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய மின் வினியோகம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்வதற்காக ஊருக்குள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை உடனடியாக இயக்கி மக்களுக்கு சீரான மினிவினியோகம் கிடைக்க அதிகாரிகளை வேண்டுகிறேன்.

விஸ்வவேல் பாண்டியன், கோதைநாச்சியார்புரம்.

அடிப்படை வசதி

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 1-வது தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் இல்லை. பல வருடங்களாக மண் சாலையாகவே உள்ளது. லேசான மழை பெய்தாலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே வாறுகால் வசதி, சிணெ்டு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

பொது குளியலறையில் குப்பை

சங்கரன்கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு குளிக்கும் இடமான பொது குளியலறையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எனவே சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமித்ரா, கடையநல்லூர்.

ஆபத்தான மின்கம்பம் 

கடையம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் திருமுருகன் பள்ளி எதிர்புறம் உள்ள உள்ள மின்கம்பம் முற்றிலும் பழுதடைந்துள்ளது. மின்கம்பம் காற்றில் அசையாதவாறு கம்பை கட்டி வைத்துள்ளனர். எந்நேரமும் உடைந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, கடையம்.

Tags:    

மேலும் செய்திகள்