புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-23 18:45 GMT

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ்.காவனூர் கிராமத்தில் காவிரி குடிநீர் பல நாட்களாக வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் இப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அய்யப்பன் கோவில் தெருவில் மழைநீரும், பாதாள சாக்கடை நீரும் ஒன்றாக சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மின்சாரம் இல்லாமல் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு ஏற்படும் தொடர் மின்தடையை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தார்சாலை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா இதம்பாடல் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழும் நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்