புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-22 18:45 GMT

தண்ணீர் குழாய் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சி மாரியம்மன் நகர் சூரக்குளம் ரோட்டில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் குழாய் இணைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தண்ணீர் குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகேஷ், காஞ்சிரங்கால்.

கால்வாய் தூர்வாரப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறாவயல் ஊராட்சி காரைக்குடி மதுரை மெயின்ரோட்டில் உள்ள நீர்வரத்து கால்வாய் மணலால் மூடி உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம், சிறாவயல்.

எரியாத தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருள் காரணமாக பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், வைகைவடகரை.

சாலை விரிவாக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா முட்டாக்கட்டியிலிருந்து செல்லியம்பட்டி வரை உள்ள சாலை ஒருவழி சாலையாக உள்ளது. முக்கியமான இந்த சாலையில் தினமும் ஏராளமான பஸ், லாரி வந்து செல்கிறது. குறுகளாக உள்ள இந்த சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை இருவழி சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாபர் அலி, சிங்கம்புணரி.

பஸ்வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கல்லல்.

Tags:    

மேலும் செய்திகள்