புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-03 17:08 GMT

அடிப்படை வசதி தேவை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி கிராமம் அழகர்சாமி நகர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட நகரில் சாலைவசதி, மின்சார வசதி, குடிதண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பையா, கொல்லங்குடி.

டிரான்ஸ்பார்மர் வேண்டும்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா வாணி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதியடையும் நிலை உள்ளது. எனவே இக்கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையற்ற மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம், சிவகங்கை.

புதிய பாலம் அமைக்கப்படுமா?

சிகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பழையனூர்- ஓடாத்தூர் இடையே உள்ள கிருதுமால் நதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. எனவே இந்த பாதையில் பாலம் அமைத்து சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்சன், சிவகங்கை.

போக்குவரத்து இடையூறு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பெரிய கடை வீதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலா, சிங்கம்புணரி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் பயணிக்க, பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சிவகங்கை.


Tags:    

மேலும் செய்திகள்