சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பல பகுதிகளில் பாலிதீன் கப், காலி தண்ணீர் பாட்டில்கள், பழ கழிவுகள், மீதமான உணவை பலர் வீசி செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், தனுஷ்கோடி.
பராமரிக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குறுங்காடுகளை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பரமக்குடி.
நிறைவடையாத சாலைப்பணி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அந்தர்நகர் பகுதியில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே இந்த சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமிர்த பாண்டியன், பரமக்குடி.
சேதமடைந்த மின்கம்பம்
ராமநாதபுரம் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
கூடுதல் கேமராக்கள் அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பஸ் நிலையத்தில் திருட்டு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் போதிய அளவு இல்லை. இதனால் குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் கேமராக்கள் அமைத்து கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்ராகிம், ராமநாதபுரம்.