புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-08-26 18:17 GMT

அடிப்படை வசதி இல்லை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் தற்காலிக பஸ் நிலைய பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாரல் மழை பெய்தாலும் கூட துர்நாற்றம் வீசுகிறது. இங்கு கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிசாமி, சிவகிரி.

ஆபத்தான மின்பெட்டி

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ்நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் உள்ள இரும்பு மின்கம்பத்தில் உள்ள மின்பெட்டி மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. அந்த மின்கம்பத்தின் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன்கடை, ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவை செயல்படுகின்றன. இதனால் அசம்பாவிதம் ஏதேனும் நடைபெறும் முன் அந்த மின்பெட்டிக்கு மூடி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் தூண்களில் சிமெண்டு பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை சரி செய்ய வேண்டும்.

-ஆறுமுகம், குறும்பலாபேரி.

வழிகாட்டி பலகையில் தவறு

குருவன்கோட்டையில் இருந்து குறிப்பன்குளம் நோக்கி செல்லும் சாலையில் அபாயகரமான வளைவு என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த எச்சரிக்கை பலகைகளில் அபாயகரமான வளைவு என்பதற்கு பதில் அபயாகரமான வளைவு என தவறுவதாக உள்ளது. அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஜெயவண்ணன், குறிப்பன்குளம்.

Tags:    

மேலும் செய்திகள்