தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர்தட்டுப்பாடு
ராமநாதபுரம் திருவாடானை தாலுகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை வேண்டும்.
அப்துல் மாலிக், திருவாடானை.
கண்மாயை சுற்றி கம்பிவேலி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சேரந்தை கிராமத்தில் உள்ள ஊருணியை பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் ஊருணி நீர் பகுதியை நாய்கள், பன்றிகள் அசுத்தம் செய்து விடுகின்றன. எனவே இந்த கண்மாயை சுற்றி கம்பிவேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகசுந்தரம், கடலாடி.
தார்ச்சாலை வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வடக்கு தெரு மாயனம் செல்லும் சாலை சேதமடைந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.
முகமது சலீம், புதுமடம்.
ஊருணி தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர்ப்பகுதியில் சோத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணி பராமரிப்பின்றி குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், நீர் தட்டுப்பாடும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வேந்திரன், சக்கரக்கோட்டை.
நடவடிக்கை ேதவை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சில இடங்களில் திருவிழா நேரத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி விழாவை நடத்துகின்றனர். இந்த ஒலிபெருக்கிகளில் சத்தம் அதிகமாக வைப்பதால் இப்பகுதி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆர்.எஸ். மங்கலம்,